பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் ஆகியோரது படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் ராணி முகர்ஜி. பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தபோதே தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரையுலகைவிட்டு விலகியிருந்த இவர், 2014 ஆம் ஆண்டில் 'மார்தானி' என்ற படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இப்படத்தில் சோலோவாக பாலியல் கும்பலை பிடிக்கும் கிரைம் பிராஞ்ச் உயர் காவல் அதிகாரியாக நடித்திருந்தார்.
போலீஸ் உடையில் ரீ எண்ட்ரி தரும் ராணி முகர்ஜி - mardaani 2
பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி நடிக்க இருக்கும் 'மர்தானி -2' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
திரில்லர் கதையாக உருவான மர்தானி படம் திருப்பங்கள் நிறைந்த காட்சிகளுடன் பார்ப்பவரை பதைபதைக்கவைத்தது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நீண்ட நாட்கள் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில், அதே படத்தின் இரண்டாம் பாகத்தில் ராணி முகர்ஜி காவல்துறை அதிகாரியாக நடிக்க இருக்கிறார். யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அதே மினுக்கான போலீஸ் கெட்டப்பில் ஜொலிக்கிறார். தற்போது, மர்தானி -2 படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்கும் ராணி முகர்ஜிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.