இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவைச் சேர்ந்தவர் பாலிவுட் நடிகர் ஹரிஷ் பச்சாட்டா (57). இவர் கடந்த 18 ஆண்டுகளாக பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வந்துள்ளார். சல்மான் கானின் 'பஜ்ரங்கி பைஜான்' படத்தில் பாகிஸ்தான் காவல்துறை அலுவலராக நடித்து கவனத்தை ஈர்த்தவர் பச்சாட்டா.
கரோனாவால் உயிரிழந்த சல்மான்கான் பட நடிகர்! - பாலிவுட் நடிகர் ஹரிஷ் பச்சாட்டா மரணம்
சிம்லா: கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகர் ஹரிஷ் பச்சாட்டா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
Harish Banchata
இவர் சினிமாவில் மட்டுமல்லாது பல தொலைக்காட்சி க்ரைம் தொடர்களிலும் நடித்துள்ளார். இவருக்கு அண்மையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக சிம்லாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டியிருந்தார். இந்த நிலையில், நேற்று (நவம்பர் 10) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஹரிஷ் பச்சாட்டா உயிரிழந்தார். இவரது தாயாரும் மிக அண்மையில்தான் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.