தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான 'அஞ்சான்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் பாலிவுட் நடிகர் ஆசிஃப் பஸ்ரா. இவர் பாலிவுட்டில் பல படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ஆசிஃப் பஸ்ரா தூக்கிட்டுத் தற்கொலை - பாலிவுட் நடிகர் ஆசிஃப் பஸ்ரா லேட்டஸ் செய்திகள்
சிம்மலா: பாலிவுட் நடிகர் ஆசிஃப் பஸ்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 52.
இவர் படங்களில் மட்டுமல்லாது 'பாதாள் லோக்' உள்ளிட்ட வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். இமாச்சலப் பிரதேச மாநிலம் தரம்சாலாவில் மெக்லியோட் கன்ஜ் என்ற இடத்தில் ஆசிஃப் பஸ்ரா கடந்த சில ஆண்டுகளாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்துவருகிறார்.
இந்த நிலையில் இன்று (நவம்பர் 12) தான் தங்கியிருந்த வீட்டில் ஆசிஃப் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ஆசிஃப் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இவரின் தற்கொலை பாலிவுட்டில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.