மும்பை: இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவியதன் மூலம் பிரபலமாக அறியப்பட்ட சோனு சூட், மும்பையின் ஜுஹு பகுதியில் சட்டவிரோதமாக கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதாக குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக மும்பை மாநகராட்சி சோனு சூட் மீது புகார் அளித்துள்ளது.
சோனு சூட் மீது மும்பை மாநகராட்சி புகார் - சோனு சூட்
சோனு சூட் சக்தி சாகரில் உள்ள தனது 6 மாடி குடியிருப்பை முறையான அனுமதி பெறாமல் ஹோட்டலாக மாற்றியுள்ளார். குடியிருப்பு கட்டடத்தை வணிக ரீதியான தேவைகு பயன்படுத்தியுள்ளார்.
அந்தப் புகாரில், சோனு சூட் சக்தி சாகரில் உள்ள தனது 6 மாடி குடியிருப்பை முறையான அனுமதி பெறாமல் ஹோட்டலாக மாற்றியுள்ளார். குடியிருப்பு கட்டடத்தை வணிக ரீதியான தேவைகு பயன்படுத்தியுள்ளார். இது சட்டப்பிரிவு 7-இன்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அதுமட்டுமல்லால் அந்த கட்டடத்தை விரிவுபடுத்தி வருகிறார் என குறிப்பிட்டுள்ளது.
2018 ஜூன், மும்பை மாநகராட்சி தனது குடியிருப்பு பகுதியை கைப்பற்ற நினைக்கிறது என சோனு சூட் புகார் அளித்திருந்தார். இந்தப் புகார் தொடர்பாக பழிவாங்கும் நோக்கத்துடன்தான் மும்பை மாநகராட்சி சோனு சூட் மீது புகாரளித்துள்ளது என பாஜக செய்தித் தொடர்பாளர் ராம் கடம் குற்றம்சாட்டியுள்ளார்.