தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஆயுஷ் திவாரி வழக்கு: 'பெல்பாட்டம்' படத்தை பாதிக்காது! - காஸ்டிங் இயக்குநர் ஆயுஷ் திவாரி வழக்கு

மும்பை: நடிகர்களை தேர்வு செய்யும் இயக்குநர் ஆயுஷ் திவாரியை 'பெல்பாட்டம்' படத்துடன் தொடர்புபடுத்தி பேசினாலும் அது படத்தை பாதிக்காது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Bell Bottom
Bell Bottom

By

Published : Dec 1, 2020, 4:52 PM IST

நடிகர்களை தேர்வு செய்யும் இயக்குநர் ஆயுஸ் திவாரி தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக தொலைக்காட்சி நடிகை குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து வெர்சோவா காவல் நிலையத்தில் பிரிவு 376இன் கீழ் ஆயுஸ் திவாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி கடந்த 2 வருடங்களாக தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நடிகை தனது புகார் மனுவின் தெரிவித்துள்ளதாக காவல் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இப்புகாரை தொலைக்காட்சி தொடர் நடிகை, நவம்பர் 26ஆம் தேதி பதிவு செய்திருந்தார். ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டவர், இதுவரை கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், ஆயுஸ் திவாரி அக்ஷய்குமாரின் நடிப்பில் உருவாகி வரும் பெல்பாட்டம் படத்திற்கும் பணியாற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இந்த வழக்கு சம்மந்தமாக பெல்பாட்டம் படத்திற்கு எந்த பாதிப்பு இல்லை என காஸ்டிங் இயக்குநர் வைபவ் விஷாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக விஷாந்த் கூறுகையில், ஒரு படத்துடன் படத்தில் பணியாற்றியவர்கள் செய்யும் தவறான செயல்கள், குற்றச்சாட்டுகளால் களங்கமாகிறது. இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. நான் பெல்பாட்டம் படத்தின் காஸ்டிங் இயக்குநர். இப்போது குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ஆயுஸ் திவாரி என் நிறுவனத்தில் சில காலங்களாக ஃப்ரீலான்ஸர் இன்டர்னாக வேலை பார்த்து வந்துள்ளார். மற்றபடி அவர் பெல்பாட்டம் படத்தில் எந்த வேலையும் பார்க்கவில்லை.

இதனால் இந்தப் படத்திற்கு எந்த களங்கமும் வராது என உறுதியாக நம்புகிறேன். எந்தப் பாதிப்பும் இல்லை. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் நியாயமான விசாரணையை நடத்தும் என நம்புகிறேன்.

எனவே தயவு செய்து இந்த வழக்குடன் பெல்பாட்டம் படத்தை இணைத்து பேசுவதை நிறுத்துமாறு ஊடகங்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன் என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details