டோட் பிலிப்ஸ் இயக்கத்தில் ஜாக்வின் பீனிக்ஸ் நடித்து வெளியான திரைப்படம் ‘ஜோக்கர்’. பேட்மேன் சீரிஸின் மோசமான வில்லன்களில் ஒருவனான ஜோக்கரின் முந்தைய வாழ்க்கைக் கதையை சித்தரிக்கும் வகையில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
'ஜோக்கர்' ஆஸ்கார் விருதை தொடர்ந்து இதற்கும் பரிந்துரை
2019இல் வெளியாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்த 'ஜோக்கர்' திரைப்படம் BAFTA விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
வன்முறையை ஊக்குவிக்கும்படி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்தாலும், உலக அளவில் இத்திரைப்படம் சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து வருகிறது.
ஏற்கனவே ஆஸ்காரில் சிறந்த படம் என்ற பிரிவில் ஜோக்கர் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது இப்படம் பிரிட்டிஷ் அகாதமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிசன் ஆர்ட்ஸ் அவார்ட்ஸ் (BAFTAs) 2020 இல் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 11 பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.