ஃபெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியத்துக்கு மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் பெயர் சூட்டும் விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தன் மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் கலந்துகொண்டார்.
முத்தத்தால் கோலியை ஆற்றுப்படுத்திய அனுஷ்கா! - விராட் கோலி
டெல்லியில் நடந்த விழா ஒன்றில் உணர்ச்சிவசப்பட்ட விராட் கோலியை அனுஷ்கா முத்தமிட்டு ஆற்றுப்படுத்திய வீடியோ வைரலாகியுள்ளது.
anuskha - virat
இந்த விழாவில் பேசிய டெல்லி கிரிக்கெட் அமைப்பின் தலைவர் ராஜத் ஷர்மா, விராட் கோலி தந்தையின் மறைவுக்குப் பின் அருண் ஜேட்லி அவரது இல்லத்துக்கு சென்றதை நினைவுகூர்ந்தார். இதை கேட்ட விராட் கோலி சற்றே கலங்கிய நிலையில் காணப்பட்டார், சூழலை உணர்ந்த அனுஷ்கா அவரது கையில் முத்தமிட்டு ஆற்றுப்படுத்தினார். விராட் கோலியும் அனுஷ்கா கைகளை இறுகப் பற்றிக் கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.