பாலிவுட்டில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் கார்த்திக் ஆர்யன். சமீபத்தில் கரண் ஜோஹர், ஷாரூக் கானின் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்தில் இருந்து கார்த்திக் ஆர்யன் விலகினார். ”கார்த்திக் ஆர்யனுடன் இனி எந்தப் படத்திலும் தான் பணியாற்ற மாட்டேன்” என கரண் ஜோஹரும் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
’நடிகர் கார்த்திக் ஆர்யனின் அமைதியை மதிக்கிறேன்’ - இயக்குநர் அனுபவ் சின்ஹா - கார்த்திக் ஆர்யனுக்கு எதிராக பாலிவுட்டில் சதி
மும்பை: நடிகர் கார்த்திக் ஆர்யனுக்கு எதிராக பாலிவுட்டில் திட்டமிட்டு சதி நடப்பதாக இயக்குநர் அனுபவ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கார்த்திக் ஆர்யன், ஆன்ந்த்.எல்.ராய் தயாரிப்பில் நடிக்கவிருக்கும் கேங்ஸ்டர் திரைப்படத்தில் இருந்து விலகினார் என வெளியான செய்திகள் வெறும் வதந்தி என படக்குழுவினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கார்த்திக் ஆர்யனுக்கு எதிராக பாலிவுட்டில் திட்டமிட்டு சதி நடைப்பெற்று வருவதாக இயக்குநர் அனுபவ் சின்ஹா ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, "தயாரிப்பாளர்கள் நடிகர்களை நீக்கினாலோ தயாரிப்பாளர்கள் மாறினாலோ அதைப்பற்றி வெளியே பேசிக்கொள்ள மாட்டார்கள். இது அடிக்கடி நடப்பதுதான். கார்த்திக் ஆர்யனுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இது நியாயமற்றதாக எனக்கு தெரிகிறது. இதற்கு பதிலாக அவர் அமைதி காப்பதை நான் மதிக்கிறேன்" எனக் கூறினார்.