மும்பை: ஜக் ஜக் ஜீயோ படக்குழுவினருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராஜ் மேத்தா இயக்கத்தில் வருண் தவான், அனில் கபூர், நீத்து கபூர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துவரும் திரைப்படம் ’ஜக் ஜக் ஜீயோ’. கரண் ஜோகர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 17ஆம் தேதி சண்டிகரில் தொடங்கியது.
இந்த சூழலில், கதாநாயகன் வருண் மற்றும் இயக்குநர் ராஜ் மேத்தா ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவர் தவிர்த்து, மற்ற படக்குழுவினர் மும்பை திரும்பினர். அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை முடிந்த பின்பு படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நகைச்சுவை நடிகர் நீத்து கபூர் 7 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இதில் கியாரா அத்வானியும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
Varun Dhawan and director Raj Mehta test COVID-19 positive