மும்பை: சோனு சூட் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கிசான்’ படம் வெற்றிபெற அமிதாப் பச்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஈ. நிவாஸ் இயக்கத்தில் சோனு சூட் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘கிசான்’. ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ‘ட்ரீம் கேர்ள்’ படத்தை இயக்கிய ராஜ் சாண்டில்யா இதை தயாரிக்கிறார்.
இந்தப் படம் வெற்றிபெற வாழ்த்துகள் என மெகாஸ்டார் அமிதாப் பச்சன் ட்வீட் செய்துள்ளார். ‘கிசான்’ குறித்த மேற்படி தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரோனா சூழலில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவியதில் இருந்து தனக்கு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வருகிறது என சோனு சூட் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிம்பா, ஆர். ராஜ்குமார், டபாங் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்ததன் மூலம் பிரபலமாக அறியப்பட்ட சோனு சூட், இனி கதாநாயகனாக வலம்வர இருக்கிறார்.