பிரபல பாலிவுட் நடிகை அலியா பட் தனது 26-வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். அந்நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள் பலர் கலந்து கொண்டு அலியாவை வாழ்த்தினர்.
டிரைவர், உதவியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அலியா பட்! - கார் ஓட்டுனர்
பாலிவுட் நடிகை அலியா பட் தனது பிறந்தநாளில் கார் டிரைவர் மற்றும் உதவியாளர் இருவருக்கும் ரூ.50 லட்சத்திற்கான காசோலை வழங்கி இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார்.
அலியா பட்
இந்நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு கார் ஓட்டுனர், உதவியாளர் ஆகிய இருவருக்கும் ரூ.50 லட்சத்திற்கான காசோலையை பரிசாக வழங்கினார். அவர்கள் இருவரும் சொந்த வீடு கட்டிக் கொள்வதற்காக அலியா வழங்கியுள்ளார். அவருடைய இந்த சர்ப்ரைஸ் கிப்ட் இருவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பல வருடங்களாக அலியா உடன் இருக்கும் இவர்களது விஸ்வாசத்திற்கு கிடைத்த பரிசு என்று அவர்களுடைய குடும்பத்தினர் புகழ்ந்துள்ளனர்.