பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது புதிய படமான ராம் சேது படப்பிடிப்பில் கலந்துகொண்டிருந்தபோது ஏப்ரல் 4ஆம் தேதி கரோனா தொற்றுக்கு ஆளானர். இதனைத் தொடர்ந்து அக்ஷய் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
கரோனா தொற்றிலிருந்து மீண்ட நடிகர் அக்ஷய் குமார்: ட்விங்கிள் கண்ணா - நடிகர் அக்ஷய் குமார்
மும்பை: பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக அவரது மனைவி ட்விங்கிள் கண்ணா தெரிவித்துள்ளார்.
Akshay Kumar
இந்நிலையில், அக்ஷய் குமார் கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக அவரது மனைவியும் நடிகையும் எழுத்தாளருமான ட்விங்கிள் கண்ணா தனது சமூகவலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆல் இஸ் வெல்...பாதுகாப்புடன் அக்ஷய் குமார் திரும்பி வருகிறார் என பதிவிட்டுள்ளார்.