தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பாழடைந்த பங்களாவில் போட்டோஷூட் - அக்‌ஷய் குமாரின் 32 வருட பிளாஷ்பேக்! - அக்‌ஷய் குமார் படங்கள்

பாழடைந்த பங்களா முன் போட்டோ எடுக்கும்போது காவலாளிகளால் விலக்கிவிடப்பட்ட சம்பவத்தையும், அதன் பின்னணியிலுள்ள சுவாரஸ்ய நிகழ்வுகளையும் நினைவுகூர்ந்துள்ளார் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்.

Breaking News

By

Published : Jun 22, 2020, 2:36 PM IST

மும்பை: பங்களா அருகே போட்டோ எடுக்க மறுக்கப்பட்ட இடத்திலேயே புதிய வீடு வாங்கி குடியிருந்து வருகிறார் நடிகர் அக்‌ஷய் குமார்.

32 ஆண்டுகளுக்கு முன்னாள் நடைபெற்ற இச்சம்பவத்தை வீடியோ மூலம் நினைவுகூர்ந்துள்ளார் அக்‌ஷய் குமார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

சினிமாவில் ஹீரோ ஆவதற்கு முன்னாள் போட்டோகிராபர் ஒருவரிடம் உதவியாளராக பணிபுரிந்தேன். அவர் எனக்கு நான்கு மாதம் சம்பள பாக்கி தர வேண்டியது இருந்து. அப்போது என்னை வைத்து போட்டோ ஷூட் எடுத்துக்கொடுத்தால் சம்பளம் வேண்டாம் என்று அவரிடம் தெரிவித்தேன்.

அதற்கு அவரும் சம்மதம் தெரிவிக்க, மும்பை ஜூஹூ பகுதியில் அமைந்திருக்கும் பாழடைந்த பங்களா அருகே சென்று போட்டோ ஷூட் மேற்கொண்டோம். அப்போது அந்த பங்களாவின் காவலாளி வேகமாக ஓடி வந்து எங்களை அங்கிருந்து விலகி போகுமாறு தெரிவித்தார். பின்னர் எங்களை விரட்டி அனுப்பினார். இருப்பினும் அவர் வருவதற்கு முன் சில புகைப்படங்களை எடுத்துவிட்டோம்.

தற்போது நான் வசிக்கும் வீடு அந்த இடத்தில்தான் கட்டப்பட்டிருக்கிறது. அந்த பாழடைந்த பங்களாவை உடைத்து, பின்னர் இப்படியொரு வீடு கட்டப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

பாலிவுட் முன்னணி ஹீரோவாக தற்போது வலம் வரும் அக்‌ஷய் குமார், பெல்பாட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: அக்ஷய் குமாரின் ஒரு வருட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details