தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அசாம் - பீகார் மாநிலங்களுக்கு உதவும் அக்‌ஷய்குமார் - அக்ஷய் குமார் நன்கொடை

மும்பை : வெள்ளப் பெருக்கு காரணமாக பாதிப்புக்குள்ளாகி இருக்கும் அசாம், பீகார் மாநிலங்களுக்கு நடிகர் அக்‌ஷய்குமார் தலா ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்க உள்ளார்.

அக்ஷய் குமார்
அக்ஷய் குமார்

By

Published : Aug 14, 2020, 5:00 PM IST

நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அசாம், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. நேபாளத்தின் எல்லையில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக, இரு மாநிலங்களும் கடும் வெள்ள பாதிப்பிற்குள்ளாகியுள்ளன.

இந்நிலையில், பீகார், அசாம் மாநில முதலமைச்சர்களிடம் தொடர்பு கொண்டு பேசிய நடிகர் அக்‌ஷய் குமார், இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு இரண்டு கோடி ரூபாயை வழங்குவதாக உறுதியளித்தார். அக்‌ஷய் குமாரின் இந்த செயலுக்கு இரு மாநில முதலமைச்சர்களும் பாராட்டுக்களும் நன்றியும் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கோவிட் -19 நெருக்கடியை சமாளிக்க உதவும் வகையில் பிரதமர் நிவாரண நிதிக்கு 25 கோடி ரூபாயை அக்‌ஷய் குமார் வழங்கியிருந்தார்.

மேலும், பிரபல இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா, அவரது கணவர் நிக் ஜோனாஸ் ஆகியோரும் அசாம் வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details