இந்தியாவில் கரோனா தொற்றால் பொருளாதரம் கடுமையாக பாதிப்புள்ளாகியுள்ளது. மேலும், கரோனா நிவாரண நிதிக்கு பிரபலங்கள், மக்கள் நிதியுதவி செய்யுங்கள் என பிரதமர் மோடியும் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்கள் நிதியுதவி அளித்தனர்.
முதலில் பி.எம் கேர்ஸ் நிதிக்கு 25 கோடி ரூபாயை நடிகர் அக்ஷய் குமார் வழங்கினார். பின் மும்பை மாநகராட்சிக்கு ரூ. 3 கோடி வழங்கினார். இதனைத் தொடர்ந்து மும்பை காவல் துறை அறக்கட்டளைக்கு ரூ. 2 கோடி வழங்கினார்.