1994 இல் உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் பாலிவுட்டின் குயின் என்று அழைக்கப்பட்டார். தமிழில் இருவர், ஜீன்ஸ், ராவணன் ஆகியப் படங்களில் நடித்த இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து 2007ஆம் திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் செய்துகொண்டாலும் கணவரோடு சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ளும் விருது நிகழ்ச்சிகளில் விநோதமான ஆடைகளை உடுத்தி அசத்திவந்தார். அவ்வப்போது ஒரு சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள ஐஸ்வர்யா ராய் -அபிஷேக் பச்சன் தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையின் பெயர் ஆரத்யா.
இந்நிலையில், இருவரும் காதலித்து திருமண தம்பதிகளாக இணைந்து நேற்றுடன் பன்னிரெண்டு வருடங்களை கடந்துவிட்ட நிலையில் அபிஷேக் பச்சன் -ஐஸ்வர்யா ராய் தங்களது திருமண நாளை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அப்போது, அபிஷேக், ஐஸ்வர்யா ராயை அன்புடன் அரவணைத்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படம் வலைதளத்தில் வைரலாகிவருகிறது.