பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜூன் மாதம் 14ஆம் தேதி மும்பை பாந்திராவில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்திற்கு சுஷாந்தின் காதலியான ரியாவும் அவரது குடும்பத்தினருமே காரணமென கூறி சுஷாந்தின் குடும்பத்தினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சமூகவலைதளத்தில் ட்ரெண்ட் ஆனது.
சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கு: ஆதாரங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க உத்தரவு
மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை குறித்து மும்பை காவல்துறையினர் சேகரித்த ஆதாரங்களை சிபிஐயிடம் ஒப்படைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றம்
இதனையடுத்து சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்போது இந்த வழக்கு தொடர்பாக மும்பை காவல்துறையினர் சேகரித்த ஆதாரங்கள் அனைத்தையும் சிபிஐயிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சிபிஐ, மும்பை காவல் துறையினருக்கு கடிதம் எழுத இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனுடன் சுஷாந்த் சிங் பயன்படுத்திய மொபைல், கணினி உள்ளிட்டவைகளையும் சிபிஐ ஆராய உள்ளது.