தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

க்ரிட்டி சனோனுக்கு 'குவராண்டைன் ஹேர்கட்' செய்த தங்கை - க்ரிட்டி சனோன் படங்கள்

பாலிவுட் நடிகை க்ரிட்டி சனோனுக்கு அவரது தங்கையும் பாடகியுமான நூபூர் சனோன் முடி வெட்டும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.

Kriti Sanon
Kriti Sanon

By

Published : May 22, 2020, 11:39 AM IST

தேசிய ஊரடங்கால் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் சமூகவலைதளங்கள் மூலம் ரசிகர்களிடம் தொடர்பில் இருந்து வருகின்றனர். தங்களது தினசரி செயல்பாடுகளை புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

இதனையடுத்து பாலிவுட் நடிகை க்ரிட்டி சனோன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் நூபூர் முடி வெட்டும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அதேபோல் க்ரிட்டியும் நூபூருக்கு முடி வெட்டியுள்ளார்.

இதற்கு 'குவராண்டைன் ஹேர்கட்' என கேப்சன் வைத்துள்ளார். இந்த வீடியோவைதற்போது நெட்டிசன்கள் பகிர்ந்துவருகின்றனர். இதற்கு முன்பு 'குவராண்டைன் ஹேர்கட்' ஆலியா பட் செய்திருந்தார்.

2011ஆம் ஆண்டு தேசிய விருது வென்ற மராத்தியில் வெளியான மாலா ஆய் வைச்சாய் (Mala Aai Vhhaychay) படத்தின் ரீமேக்காக இந்தியில் லட்சுமன் உதேகர் இயக்கி வரும் மிமி (Mimi) படத்தில் க்ரிட்டி தற்போது நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: சிகரெட் பிடிப்பவர்கள் பிணத்துக்கு சமம்- க்ரிட்டி சனோன்

ABOUT THE AUTHOR

...view details