மார்ச் 21 ஆம் வட இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வட இந்தியர்கள் ஹோலி பண்டிகையை சிறப்பிக்கும் விதமாக கலர் பொடிகளை தூவி மிக விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில், சீரியல் நடிகைகளான நியா சா்மா-ரெஹனா பண்டிட் ஹோலி கொண்டாட்டத்தின்போது பத்திரிகையாளர் முன்பு யாரும் எதிர்பாராத நிலையில் இருவரும் நேரடியாக உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்துக்கொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும், பத்திரிகையாளர்கள் முன்பு இப்படி முத்தம் கொடுத்துக்கொண்ட இரண்டு நடிகைகளின் காணொளி காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி விவாத பொருளாக மாறியுள்ளது. இந்த முத்தக் காட்சியை கண்ட நெட்டிசன்கள் நியா சா்மா-ரெஹனா பண்டிட் இருவரும் ஓரினச்சேர்க்கையாளர் என்றும் கலாச்சாரத்தை சீரழித்துவிட்டனர் எனக் கூறி மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து வருகின்றனர்.
இந்தநிலையில், நியா சா்மா-ரெஹனா பண்டிட்டும் இந்த சர்ச்சை சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் பதில் அளித்துள்ளனர்.
இதுகுறித்து ரெஹனா பண்டிட் கூறியதாவது 'நானும் நியா சா்மாவும் நெருங்கிய தோழிகளாக இருந்து வருகிறோம். சகோதரியாக நினைத்துதான் நியா சர்மாவுக்கு முத்தம் கொடுத்தேன் ஆனால் சமூகவலைதளங்களில் எங்கள் இருவரையும் தவறாக பேசி வருகின்றனர். நியா சர்மா மீது அதிகம் பாசம் வைத்துள்ளேன். அந்த அன்பை வெளிப்படுத்தும் விதமாகத்தான் முத்தம் கொடுத்தேன். நாங்கள் லெஸ்பியன் கிடையாது. நாங்கள் இருவரும் சகோதரிகளாக பழகி வருகிறோம் எங்கள் நட்பை கொச்சைப்படுத்த வேண்டாம்'என ரெஹனா பண்டிட் கேட்டுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து பேசிய நியா சர்மா,'தாங்கள் முத்தம் கொடுத்துக் கொண்டதில் என்ன தவறு இருக்கிறது. ஒரு சகோதரிக்கு முத்தம் கொடுப்பதை கேவலமாக பேசுவீர்களா... உங்களுக்காக எங்கள் அன்பை வெளிகாட்டாமல் இருக்க முடியாது. சாதாரண முத்தம்தான் அதை பெரிதுபடுத்த வேண்டாம். நாங்கள் இருவரும் நல்ல சகோதரிகளாக பழகி வருகிறோம். இது பற்றி நெட்டிசன்களுக்காக பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை'என நியா சர்மா சவுக்கடியான பதிலை அளித்தார்.