இந்திய கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனியின் வாழ்க்கை கதையை சொல்லும் 'எம் எஸ் தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி' படத்தில் தோனியாக நடித்தவர் நடிகர் சுஷாந்த் சிங். இப்படத்தில் நடித்ததன் மூலமாக இவர் உலகளவில் மிகப் பிரபலமானார்.
சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் சுஷாந்த் உதாரணம் - நிகில் ஆனந்த் - சுஷாந்த் சிங்கின் படங்கள்
மும்பை: மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வாழ்க்கை குறித்து படமாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜூன் 14ஆம் தேதி சுஷாந்த் சிங் மும்பையிலுள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். இவரின் இந்த மரணம் திரைப் பிரபலங்கள், ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சுஷாந்த் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டிருந்த நிலையில், வாரிசு நடிகர்களின் ஆதிக்கம்தான் அவரது மரணத்திற்கு காரணம் என சமூக வலைதளத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இதற்கிடையில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வாழ்க்கை குறித்த திரைப்படத்தை நிகில் ஆனந்த் என்பவர் இயக்க இருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இதுகுறித்து நிகில் ஆனந்த் கூறியிருப்பதாவது, சுஷாந்த் இன்று நம்மோடு இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை.
சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு சராசரி மனிதருக்கும் சுஷாந்த் ஒரு உதாரணமாக இருந்தார். அவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, சிறந்த மனிதரும் கூட. அவரைப் பற்றி நான் எடுக்கும் படம் அவருக்கு ஒரு சமர்ப்பணமாக இருக்கும்.
சினிமா உலகில் அவர் சாகாவரம் பெற்றவராக வேண்டும் என்பது என்னுடைய கனவு. சினிமா துறையில் இருக்கும் பலரை இப்படம் ஊக்குவிக்கும். வாரிசு அரசியலை விடுத்து திறமை உள்ளவர்களுக்கு பாலிவுட் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இரண்டு மாதங்களில் கரோனா அச்சுறுத்தல் முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும். கதை, நடிகர்கள் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் படக்குழுவினர் தற்போது கவனம் செலுத்த உள்ளனர்.
இந்தியா முழுவதும் இப்படம் வெளியாகும். உலகம் முழுவதும் இப்படத்தை கொண்டு செல்வதற்கான முயற்சி எடுக்கப்படும் என கூறினார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் 2022 ஆம் ஆண்டு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமல்லாது இப்படம் கிரவுட் ஃபண்டிங் முறையில் தயாரிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.