ஆமீர் கான், கரீனா கபூர் ஆகியோர் இணைந்து நடித்துவரும் படம் 'லால் சிங் சத்தா'. இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்கிவரும் இந்தப் படம் ஆறு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஹாலிவுட் படமான 'Forrest Gump' படத்தின் இந்தி ரீமேக்காகும். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாக சைத்தன்யா நடிக்கவுள்ளதாக தெரிகிறது.
ஆமீர் கானின் 'லால் சிங் சத்தா' படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்! - கார்கில் போர்
மும்பை: ஆமீர் கான் நடிப்பில் உருவாகி வரும் 'லால் சிங் சத்தா' திரைப்படத்தின் படப்பிடிப்பு சிறிய அளவிலான படக்குழுவினருடன் தொடங்கப்பட்டுள்ளது.
அனைவரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம், கரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மகாராஷ்டிரா அரசு ஜூன் 7 முதல் கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பை நடத்தலாம் என அறிவித்தையடுத்து 'லால் சிங் சத்தா' படத்தயாரிப்பாளர்கள் சிறிய அளவிலான படக்குழுவினரை வைத்து மும்பையில் எடுக்கப்பட கூடிய காட்சிகளை இனி வரும் நாள்களில் நிறைவு செய்யவுள்ளனர். நேற்று தொடங்கிய படப்பிடிப்பில் ஆமீர் கான் கலந்துக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கார்கில் போர் சூழலை படமாக்க ‘லால் சிங் சத்தா’ படக்குழுவினர் லடாக் செல்லவுள்ளனர். இதற்காக ஸ்டண்ட் மாஸ்டர் பர்வேஸ் சேக் ஒரு மாபெரும் போர்க்கள செட்டை அமைக்கவுள்ளார். இந்தப் படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸையொட்டி திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.