ஆமிர் கானுடனான சந்திப்பு குறித்து ட்வீட் செய்துள்ள ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, "புகழ்பெற்ற நடிகர் ஆமிர் கான், கிரண் ராவ் ஆகியோரை இன்று (ஆக.01) சந்தித்தேன். ஜம்மு-காஷ்மீரின் புதிய திரைப்படக் கொள்கையை குறித்து விவாதித்தோம்.
இந்தக் கொள்கை விரைவில் வெளியிடப்படும். இந்தச் சந்திப்பில் ஜம்மு-காஷ்மீரின் புகழை பாலிவுட்டில் மீண்டும் பிரதிபளிக்கவும், இந்த இடத்தை பிடித்தமான திரைப்பட படப்பிடிப்பு இடமாக மாற்றுவது குறித்தும் பேசினோம்" எனத் தெரிவித்துள்ளார்.