நடிகர்கள் அக்க்ஷய்குமார், ரன்வீர் சிங், அஜய் தேவ்கன் நடித்துள்ள படம் ’சூர்யவன்ஷி’. ரோகித் ஷெட்டி இயக்கியுள்ள இப்படத்தை தர்மா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. த்ரில்லர் காப் ஸ்டோரியாக உருவாகியுள்ள இப்படத்தில் நாயகியாக நடிகை கத்ரீனா கைஃப் நடித்துள்ளார்.
அதிரடி ஆக்ஷன் காட்சிகள், கார் ரேஸ் என்று விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இந்தியன் மார்வெல்லாக உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாது மார்ச் 24ஆம் தேதி படம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர். ஆனால் கரோனா அச்சம் காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் வெளியீட்டு தேதி தள்ளிபோனது.