இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் Whatsapp சேவைகள் முடங்கின. மக்கள் செய்திகளை பகிர முடியாமல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவதிக்குள்ளாகி உள்ளனர். இதுகுறித்து வாட்ஸ்அப் நிறுவனம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனிடையே வாட்ஸ்அப் நிறுவன ட்விட்டர் பக்கத்தை பயனர்கள் ஆயிரக்கணக்கான பயனர்கள் டேக் செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர். மறுப்புறம் நெட்டிசன்கள் பல்வேறு மீம்ஸ்களையும் உருவாக்கி ட்விட்டரில் பகிர்ந்து கிண்டலடித்து வருகின்றனர்.
ETV Bharat / science-and-technology
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் Whatsapp முடங்கியது
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் Whatsapp சேவைகள் முற்றிலும் முடங்கின.
உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் 60 கோடிக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ்அப் பயனர்களாக உள்ளனர். தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங், போட்டோ, ஆடியோ, வீடியோ பகிர்தல், தனி நபர் மற்றும் குரூப் மெசேஜ் சேவைகளை வழங்கிவருகிறது. பல நிறுவனங்கள் வாட்ஸ்அப் செயலியை நிர்வாக ரீதியான தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்திவருகின்றன.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் சூரிய கிரகணம்... வெறும் கண்களால் பார்க்கக் கூடாது... மக்களே எச்சரிக்கை...