தமிழ்நாடு

tamil nadu

வாட்ஸ்-அப்பில் வாயைப் பிளக்க வைக்கும் புது அப்டேட்ஸ்...

வாட்ஸ்-அப் 2 GB அளவிலான வீடியோக்களை அனுப்பும் வசதி, மெசேஜ்களுக்கு ரியாக்சன் போன்ற அப்டேட்களால், அதன் பயனாளர்களை ஆச்சரியத்திலும், போட்டியாளர்களை பதற்றத்திற்கும் ஆளாக்கியுள்ளது.

By

Published : Mar 29, 2022, 8:13 PM IST

Published : Mar 29, 2022, 8:13 PM IST

Updated : Mar 29, 2022, 9:52 PM IST

Whatsapp Update
Whatsapp Update

ஒருவர் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் வாட்ஸ்-அப் செயலி மூலம் அவரை எளிதில் தொடர்புகொள்ளலாம் என்பதாலேயே, உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் சாட்டிங் செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. வாட்ஸ்அப், பிற சாட்டிங் செயலிகளைப் போன்று இல்லாமல், இளைஞர்களுக்கு மட்டுமின்றி அனைத்து வயதினருக்கும் ஏற்ற செயலியாக இருந்துவருகிறது.

இதனால், பல்வேறு அப்டேட்களை அடுத்தடுத்து வாட்ஸ்-அப் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில், மெசேஜ்களுக்கு ரியாக்ஷன் வசதியை பல்வேறு வாட்ஸ்-அப், தனது பீட்டா பயனாளர்களுக்கு அளித்துள்ளது. இந்நிலையில், வாட்ஸ்-அப்பில் நீண்ட நாளாக பெரும் குறையாக இருந்து வந்த ஒரு வசதியை மாற்றி, அந்நிறுவனம் தற்போது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்-அப்பில் வாயைப் பிளக்க வைக்கும் புது அப்டேட்ஸ்....

அதாவது, 100 MB அளவிலான வீடியோக்கள், கோப்புகளை மட்டுமே அனுப்ப முடியும் என்ற நிலையை மாற்றி, தற்போது 2 GB வரையிலான கோப்புகளை அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் வாட்ஸ்-அப், பீட்டா வெர்ஷன் ஒன்று வெளியிடப்பட்டு, அர்ஜென்டினாவில் சில பயனாளர்களுக்கு மட்டும் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ்-அப்பில் எடுக்கப்பட்டுள்ள இந்த Screenshot, IOS அமைப்பைக் காட்டினாலும், அர்ஜென்டினாவில் Android, IOS என இரு அமைப்பிலும் பீட்டா வெர்ஷன்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பீட்டா வெர்ஷனின் ஸ்கிரீன்ஷாட்

வாட்ஸ்-அப், இதை உலகம் முழுவதும் எப்போது செயல்படுத்தும் என்று உறுதியாக தெரியவில்லை. இது வெறும் சோதனை ஓட்டம் மட்டுமே என்பதால், வாட்ஸ்-அப் இந்த வசதியை விரிவாக்கம் செய்யுமா செய்யாதா என்பதை காலம்தான் பதில் சொல்லும். மேலும், வாட்ஸ்-அப்பின் இதுபோன்ற திடீர் அப்டேட் செய்திகள் அதன் போட்டி நிறுவனங்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

இதையும் படிங்க: Stock Market: சென்செக்ஸ் 231 புள்ளி, நிஃப்டி 69 புள்ளிகள் உயர்ந்தன

Last Updated : Mar 29, 2022, 9:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details