தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

வெளியானது சாம்சங் கேலக்ஸி ஃபிட் வாட்ச் - galaxy fit

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஃபிட், கேலக்ஸி ஃபிட் ஈ என்று இரண்டு புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடல்களை வெளியிட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி பிட்

By

Published : Jun 27, 2019, 9:56 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

சியோமி நிறுவனம் சமீபத்தில் "எம்.ஐ பேண்ட் 4" என்ற ஸ்மார்ட் வாட்சையும் ஹவாய் நிறுவனம் "ஹானர் பேண்ட் 4" என்ற ஸ்மார்ட் வாட்சையும் சீனாவில் வெளியிட்டிருந்தது. அதற்கு பதிலடி தரும் வகையில் சாம்சங் நிறுவனம் தனது ஸ்மாரட் வாட்ச் வரிசையில் இரண்டு புதிய மாடல்களை வெளியிட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி பிட்

கேலக்ஸி ஃபிட், கேலக்ஸி ஃபிட் ஈ (Galaxy Fit, Galaxy Fit e) என்ற பெயரிடப்பட்டிருக்கும் இந்த வாட்ச்கள் நமது அன்றாட செயல்பாடுகளை டிராக் செய்ய உதவும். மேலும் இரண்டு வாட்ச்களும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியையும் கொண்டது. மேலும் மொபைல் ஃபோனில் இந்த வாட்ச்சை கனெக்ட் செய்துகொண்டால் மொபைல் ஃபோனுக்கு வரும் அழைப்புகள், மெசேஜ்கள், அலர்ட்களை வாட்சின் வழியே கட்டுப்படுத்த முடியும்.

கேலக்ஸி ஃபிட்

கேலக்ஸி ஃபிட் வாட்ச்சானது 0.9 கலர் அமோல்டு (AMOLED) திரையைக் கொண்டது. 2 ஜிபி ரேமையும் 32 ஜிபி சேமிப்பையும் கொண்ட இது ப்ளு டூத் 5 கொண்டு இயங்குகிறது. 120mah பேட்டரியைக் கொண்ட இதன் எடை சுமார் 23 கிராம்கள் ஆகும்.

சாம்சங் கேலக்ஸி பிட்

கேலக்ஸி ஃபிட் ஈ

அதேபோல கேலக்ஸி ஃபிட் ஈ .74 பி.எம்.ஓ.எல்.இ.டி (PMOLED) திரையையும் 128kb சேமிப்பையும் கொண்டது. 70mah பேட்டரியையும் 15 கிராம் எடையையும் கொண்டது.

சாம்சங் கேலக்ஸி பிட் இ

கருப்பு மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கும கேலக்ஸி ஃபிட் வாட்ச் ஜூன் 25 முதல் பிளிப்கார்ட், மிந்த்ரா, சாம்சங் இணையதளத்திலும் ஷோ ரூம்களிலும் கிடைக்கும். அதேபோல கருப்பு, வெள்ளை, மஞ்சள் நிறங்களில் வெளிவரும் கேலக்ஸி ஃபிட் ஈ வாட்ச்சின் முன்பதிவு ஜுலை 1ஆம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் தொடங்கவுள்ளது. கேலக்ஸி ஃபிட் வாட்ச் ரூ 9,990-க்கும், கேலக்ஸி ஃபிட் ஈ ரூ 2,590-க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details