இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்துவரும் டெக் நிறுவனங்களில் ஒன்று ரியல்மி. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன்களை தாண்டி வாடிக்கையாளர்களுக்குப் பயன்தரும் பல்வேறு டெக் சாதன பொருள்களை வெளியிட்டுவருகிறது. அதன்படி நீண்ட நாள்களாக எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட நான்கு தயாரிப்புகளை ரியல்மி திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.
ரியல்மி டிவி
- எல்இடி டிஸ்பிளே
- மீடியாடெக் 64 பிட் குவாட் கோர் பிராசஸர்
- ஆண்ட்ராய்டு இயங்குதளம்
- 24W quad stereo Dolby ஆடியோ வசதி
32 இன்ச், 43 இன்ச் என்று இரு வேறு அளவுகளில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட் டிவி, வரும் ஜூன் 2ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. 32 இன்ச் அளவு கொண்ட ஸ்மார்ட் டிவி ரூ.12,999க்கும், 43 இன்ச் அளவு கொண்ட டிவி ரூ. 21,999க்கும் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி ஸ்மார்ட் வாட்ச்
- 1.4 இன்ச் கலர் டிஸ்பிளே
- 24*7 இதய துடிப்பைக் கண்காணிக்கும் (Heart rate monitor) வசதி
- ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை கண்காணிக்கும் SPO2 வசதி
- பாதுகாப்பிற்குக் கொரில்லா க்ளாஸ் 3 வசதி
- IP68 மதிப்பீடு (தூசி மற்றும் நீரால் வாட்ச் பாதிக்கப்படாது)
- ஆடியோ மற்றும் கேமராவை ஸ்மார்ட் வாட்ச் மூலம் கட்டுப்படுத்தும் வசதி
- விலை - ரூ.3,999