தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவாக புதிய ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்! - தன்பால் ஈர்ப்பாளர்கள்

வாஷிங்டன்: தன்பாலின ஈர்ப்பாளர்களை ஆதரிக்கும் வகையில் ஆப்பிள் நிறுவனம் இரண்டு சிறப்பு ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் மாதிரிகளை வெளியிட்டுள்ளது.

Apple introduces 2 Pride Edition sport bands
Apple introduces 2 Pride Edition sport bands

By

Published : May 20, 2020, 1:40 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகெங்கும் ரசிகர்கள் உள்ளனர். ஐபோன்களின் விலை தொடர்ந்து அதிகரிக்கும்போதும், ஐபோன்களை வாங்க பொதுமக்கள் காட்டும் ஆர்வமே இதற்கு சாட்சி.

இதுவரை ஆப்பிள் நிறுவனம் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவாகவே இருந்துவந்துள்ளது. அவர்களை ஆதரிக்கும் வகையில் சிறப்புத் தயாரிப்புகளையும் ஆப்பிள் நிறுவனம் அவ்வப்போது வெளியிடும். 2017ஆம் ஆண்டு முதல் ஆப்பிள் நிறுவனம் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவான தயாரிப்புகளை வெளியிட்டுவருகிறது.

அந்த வரிசையில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவாகச் சமீபத்தில் வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச்களின் சிறப்பு மாடல்களையும் ஆப்பிள் தற்போது வெளியிட்டுள்ளது. வானவில் வண்ணத்தைக் கொண்ட இந்த ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்கள் ஆப்பிள் இணையதளத்தில் ஷோரூம்களிலும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிரான வன்முறையும் வெறுப்புணர்வும் அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில், ஆப்பிள் நிறுவனம் துணிச்சலாகத் தனது நிலைப்பாட்டை மீண்டும் உணர்த்தியுள்ளது.

இதையும் படிங்க: 50 மில்லியன் டவுன்லோடை தாண்டிய கூகுள் மீட்!

Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details