தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக சிலந்தி பட்டு மூலம் புதிய பொருள் உருவாக்கம் - ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக சிலந்தி பட்டு மூலம் புதிய பொருள் உருவாக்கம்

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக சிலந்தி பட்டு மூலம் புதிய பொருளை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக சிலந்தி பட்டு மூலம் புதிய பொருள் உருவாக்கம்
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக சிலந்தி பட்டு மூலம் புதிய பொருள் உருவாக்கம்

By

Published : Jun 15, 2021, 2:37 PM IST

பல நுகர்வோர் தயாரிப்புகளில் ஒருமுறை பயன்டுத்தும் பிளாஸ்டிக்குகளை தவிர்க்கும் விதமாகவோ அல்லது அதற்கு மாற்றாகவோ தாவர அடிப்படையிலான, நிலையான பொருளை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சிலந்திப் பூச்சியின் பட்டுப் பண்புகளைக் கொண்டு, பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக இயற்கையான பாலிமர் கூட்டுப்பொருளுடன் கூடிய, புதிய பொருள் ஒன்றை தயாரித்துள்ளனர்.

புதிய பொருள் இன்று பயன்பாட்டில் உள்ள பல பொதுவான பிளாஸ்டிக்குகளைப் போலவே வலுவானது; பல பொதுவான வீட்டுப் பொருட்களில் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாகப் பயன்படுத்தக்கூடியது.

பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக உருவாக்கப்பட்ட பொருளானது, தாவர புரதங்களை இணைப்பதற்கான புதிய அணுகுமுறையைப் பயன்படுத்தி, மூலக்கூறு மட்டத்தில் பட்டு தயாரிக்கப்பட்டது.

இவற்றிற்கு எரிசக்தி-திறனுள்ள முறை நன்றாக இருக்கிறது. இதன் விளைவாக பிளாஸ்டிக் போன்ற ஒன்று கிடைக்கிறது. இதில் கிடைக்கும் மங்காத 'கட்டமைப்பு' நிறத்தை பாலிமரில் சேர்க்கலாம், மேலும் இது தண்ணீரை எதிர்க்கும் பூச்சுகளையும் தயாரிக்கப்பயன்படுகிறது.

அதே சமயம் மற்ற வகை பயோபிளாஸ்டிக்குகளுக்கு தொழில்துறை உரம் தயாரிக்கும் வசதிகள் தேவைப்படுகின்றன. கூடுதலாக இதில் இயற்கையான கட்டுமானத் தொகுதிகளில் எந்த வேதியியல் மாற்றங்களும் தேவையில்லை. இதனால் பெரும்பாலான இயற்கை சூழல்களில் அது பாதுகாப்பாக சிதைந்துவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்தான முடிவுகள் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியாகியுள்ளன.

அல்சைமர் நோய் குறித்த கேம்பிரிட்ஜின் வேதியியல் துறையில் பேராசிரியர் டூமாஸ் நோல்ஸின் புரத ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, சிலந்தி பட்டு போன்ற பொருட்கள் இத்தகைய பலவீனமான மூலக்கூறு பிணைப்புகளைக் கொண்டிருந்தாலும் ஏன் வலுவாக இருக்கின்றன என ஆராய்ச்சி செய்தார்.

"சிலந்தி பட்டுக்கு அதன் வலிமையைக் கொடுக்கும் முக்கிய அம்சங்களில் ஒன்று ஹைட்ரஜன் பிணைப்புகள்" என்று நோல்ஸ் கூறுகிறார்.

முற்றிலும் வேறுபட்ட கலவையுடன் கூடிய புரதமான சோயா புரோட்டீன் ஐசோலேட்டைப் (SPI) பயன்படுத்தி சிலந்தி பட்டுகளில் காணப்படும் கட்டமைப்புகளை ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக நகலெடுத்தனர். இதன்மூலம் பிளாஸ்டிக் போன்ற பொருளை உருவாக்கியுள்ளனர்.

இந்த முறை ஹைட்ரஜன் பிணைப்பு உருவாக்கத்தால் மேம்பட்ட புரத கட்டமைப்புகள் உருவாக்கப்படுகிறது. இரண்டாவது கட்டத்தில், கரைப்பான் அகற்றப்படுகிறது, இதன் விளைவாக நீரில் கரையாத பொருள் கிடைக்கிறது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details