சான் பிரான்சிஸ்கோ(அமெரிக்கா): ஐபோன்களின் இயங்குதளத்தின் லேட்டஸ்ட் வெர்ஷனான ஐஓஎஸ் 15-ஐ அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள். புதிய வெர்ஷனில் ஃபேஸ்டைம், ஐமெஸேஜ், கேமரா மற்றும் ஆப்பிள் மேப்ஸ் ஆகிய வசதிகளை மேம்படுத்தியிருக்கிறது.
அந்த வகையில், ஆப்பிள் ஐபேட்களின் பிரத்யேக இயங்குதளமான ஐபேட் ஓஎஸ்ஸும் (iPadOS) ஐஓஎஸ் 15இல் அறிமுகமான பல புதிய வசதிகளைப் பெற்றிருக்கிறது.
ஐபேட் ஓஎஸ்15 சிறப்பு அம்சங்கள்
- ஐபேட் ஓஎஸ்14இல் அனைத்து விட்ஜெட்களும் ஒரே இடத்தில் இருக்கும். ஆனால், புதிய வெர்ஷனில் பயனாளர்கள் விட்ஜெட்களை எங்கு வேண்டுமானாலும் நகர்த்தி வைத்துக்கொள்ளலாம்.
- கடந்தாண்டு ஐஓஎஸ்-க்கு வழங்கப்பட்ட ஆப் லைப்ரரி வசதி தற்போது ஐபேடிற்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், பயனாளர்கள் அனைத்து விதமான செயலிகளையும், ஒரே இடத்தில் பார்த்து நிர்வகிக்க முடியும்.
- இரண்டு ஆப்களை ஒரே திரையில் வைத்துப் பயன்படுத்தும் வகையில், மல்ட்டி டாஸ்கிங் வசதி மேம்படுத்தப்பட்ட வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.
- நோட்ஸ் ஆப் செயலியில் புதிதாக குயிக் நோட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பயனாளர்கள் எந்த செயலி பயன்படுத்திக்கொண்டிருந்தாலும், ஆப்பிள் பென்சிலின் ஸ்வைப் மூலம் குறிப்புகளை நோட் செய்திட முடியும்.
- சஃபாரி பிரவுசர் புதிய வெர்ஷனில் வெளிவந்துள்ளது. புதிய டேப் பார் கச்சிதமான திரையின் அடிப்பகுதியில் மிதக்கிறது. எனவே பயனர்கள் டேப்களுக்கு இடையில் எளிதாக ஸ்வைப் செய்யலாம்.
- உங்கள் ஐபி முகவரியை ஹேக்கர்கள் அணுகுவதை புதிய சஃபாரி வெர்ஷன் தடுக்கிறது. மேலும் உங்களிடம் கட்டண iCloud கணக்கு இருந்தால், தனியார் ரிலே அம்சம் மூலம் ப்ரவுசிங் செயல்பாடுகள் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்திட முடியும்.
இதையும் படிங்க:2025க்குள் 60 லட்சம் மின்சார இருசக்கர வாகனங்கள் சாலையில் ஓடும் - ஏத்தர் உறுதி