தென் கொரியாவின் சாம்சங் நிறுவனம் சர்வதேச அளவில் மிக முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போன் சந்தையில் உலகில் தவிர்க்க முடியாத நிறுவனங்களில் ஒன்றாக சாம்சங் திகழ்கிறது.
இந்நிலையில், சாம்சங் நிறுவனம் சுமார் 116 பில்லியன் டாலர்களை பிராசஸர் சிப்களின் உற்பத்தியை அதிகப்படுத்த முதலீடு செய்துள்ளது. இதன்மூலம் பிராசஸர் சிப்களின் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் தைவான் நாட்டின் டிஎஸ்பிசி நிறுவனத்திற்கு கடும் போட்டியை சாம்சங் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.