பெங்களூரு (கர்நாடகம்):கரோனா காலத்தில், மாநிலத்தில் இதுவரை 2008 சைபர் குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. தினமும், 10-15 வழக்குகள் பதியப்படுவதாக சைபர் காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவிட்-19 தாக்கம் பெருநிறுவன வணிகத்தை ஊசலாட வைத்தது. இதனால் பெருவாரியான பணியாளர்கள் வேலையிழப்பைச் சந்தித்தனர். இப்படியாக வேலையிழப்பைச் சந்தித்த பணியாளர்கள், புதிய வேலைக்காக இணையத்தில் உலாவத் தொடங்கினர்.
இதனை நல்வாய்ப்பாக எடுத்துக்கொண்ட சைபர் குற்றவாளிகள், வேலை தேடுபவர்களை தாக்கத் தொடங்கினர். வேலை தேடுபவர்களுக்கு ஏற்ப, தங்களின் விளம்பரங்களை பதிவுசெய்து, அதன்மூலம் பயனர் தகவல் திருட்டில் ஈடுபட்டுவருகின்றனர். அதுமட்டுமில்லாமல், “வேலைக்கு பதிவுசெய்ய கைப்பேசிக்கு வரும் ‘ஓடிபி’யை கூறவும்” என்று கடவுசொல்லைக் கேட்டுபெற்று, வங்கி கணக்கில் இருந்து பணத்தை சுருட்டும் வேலையில், சைபர் குற்றவாளிகள் ஈடுபடுகின்றனர்.