தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

பிட்காயின் மோசடி கும்பலிடம் இருந்து சூப்பர் கணினிகளை பாதுகாக்க புதிய தொழில்நுட்பம்!

பிட்காயின், மோனெரோ போன்ற கிரிப்டோகரன்ஸிக்காக அதிதிறன் கொண்ட கணினிகளை ஹேக் செய்யும் குறியீடுகளை கண்டறிய அமெரிக்காவின் கணினி விஞ்ஞானிகள் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) முறையை உருவாக்கியுள்ளனர். இது தீங்கிழைக்கும் குறியீடுகளை கண்டறிந்து உடனடியாக கணினி இயக்குநருக்கு தகவல் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதிதிறன் கொண்ட கணினிகள்
அதிதிறன் கொண்ட கணினிகள்

By

Published : Aug 24, 2020, 12:40 AM IST

Updated : Feb 16, 2021, 7:31 PM IST

நியூயார்க்:அறியப்பட்ட பிட்காயின் ஹேக் குறியீட்டை ஒப்பிட்டு புதிய செயற்கை நுண்ணறிவை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் உள்பட அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சோதித்து வெற்றிகண்டுள்ளனர்.

அதிதிறன் கொண்ட கணினிகளை பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளை உற்பத்தி செய்வதற்காக ஹேக்கர்கள் குறியீடுகளை உள்ளிட்டு தங்கள் தேவைக்கேற்ப கணினியின் திறனை பயன்படுத்திக்கொள்வர். இந்த புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, ஹேக்கர்கள் அனுப்பும் குறியீடுகளை கண்டறிந்து கணினி இயக்குநர்களுக்கு சமிஞ்சை அனுப்பும்.

பேஸ்புக் கிளாசிக் டிசைன் செப்டம்பர் முதல் இருக்காது!

இதன்மூலம் கணினியின் செயல்பாடுகள் தடங்கல் இல்லாமல் நடைபெற அதன் இயக்குநர்கள் பாதுகாத்துக்கொள்ள முடியும். மேலும், இதுபோன்ற ஹேக்கர்களின் குறியீட்டை, தானாக இயங்கி அழிக்கும் வகையிலான செயற்கை நுண்ணறிவை தொழில்நுட்பம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.

Last Updated : Feb 16, 2021, 7:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details