தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

சூசைட் ஸ்க்வாட்: கில் தி ஜஸ்டிஸ் லீக் கேமின் ட்ரெய்லர் வெளியீடு! - சூசைட் ஸ்க்வாட்: கில் தி ஜஸ்டிஸ் லீக்

வாஷிங்டன்: ராக்ஸ்டெடி ஸ்டுடியோஸ் தனது அடுத்த முயற்சியாக சூசைட் ஸ்க்வாட்: கில் தி ஜஸ்டிஸ் லீக் என்ற புதிய ஆக்ஷ்ன் கேமின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது.

suicide
suicide

By

Published : Aug 24, 2020, 2:32 PM IST

Updated : Feb 16, 2021, 7:52 PM IST

உலகளவில் பிரபலமான டிசி காமிக்ஸ் திரைப்படங்களை பார்க்காதோர் யாரும் இருந்திட முடியாது. அந்த வகையில், திரைப்படத்தை போலவே தத்ரூபமாக கேம்களையும் வடிவமைத்து வருகின்றனர். ஹைடேக் கிராபிக்ஸ் கேம் பிரியர்களை எளிதாக கவர்ந்து விடுகிறது. இத்தகைய கேம்களை விளையாட பலர் தங்களது கணினிகளை அட்வான்ஸ்டாக மாற்றுகின்றனர்.

இந்நிலையில், டிசி காமிக்ஸின் வில்லன்கள் ஒன்றிணையும் சூசைட் ஸ்க்வாட் திரைபடத்தின் கதாபாத்திரங்களை ஒன்றினைந்து சூசைட் ஸ்க்வாட்: கில் தி ஜஸ்டிஸ் லீக் என்ற புதிய ஆக்ஷ்ன் கேமை ராக்ஸ்டெடி ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இந்த கேம் குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், டிசிஃபென்டோம் நிகழ்ச்சியில் கேமின் ட்ரெய்லரை வெளியிட்டனர். தற்போது, இந்த கேமின் ட்ரெய்லர் ட்ரெண்டாகி வருகிறது.

இந்த கேம் விரைவில் பிசி, பிளே ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் ஆகியவற்றுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ராக்ஸ்டெடி ஸ்டுடியோஸ் பேட்மேன் கேம்களை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Feb 16, 2021, 7:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details