கரோனா பரவல் என்பது மக்கள் வேலை செய்யும் முறையையே முற்றிலும் மாற்றியுள்ளது. கரோனாவுக்கு முன்பு வரை ஸ்மார்ட்போன்களே நமது பெரும்பாலான பணிகளை செய்துவிடும் என்பதால் யாரும் லேப்டாப்களை வாங்குவது குறித்து பெரிதாக சிந்திக்கவில்லை.
ஆனால், இந்த கரோனா பரவலும் இதனால் அதிகரித்த வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையும் (work from home) மக்களை லேப்டாப்களை நோக்கி திருப்பியுள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள பல நிறுவனங்களும் புதிய லேப்டாப் மாடல்களை வெளியிட்டுவருகின்றன.
இந்நிலையில் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான நோக்கியா ப்யூர்புக் X14 என்ற புதிய லேப்டாப்பை 59,999 ரூபாய்க்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.