கான்பூர்: ஐஐடி கான்பூரின் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று குளிர்சாதன பெட்டிகளை மலிவு விலை காற்று சுத்திகரிப்பு சாதனங்களாக மாற்றும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை ஐஐடி கான்பூர் மற்றும் ஐஐஎஸ்சி பெங்களூருவை சேர்ந்த பேராசிரியர்கள் இணைந்து கண்டுபிடித்துள்ளனர். இதில் ஏர் ஃபில்டர்களால் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு காற்று சுத்திகரிப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஏர் ஃபில்டர்களில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை குளிர்சாதன பெட்டிகளில் பொருத்தும்போது உயிருக்கு ஆபத்தான வைரஸ்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இது மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபனமாகியுள்ளது. இதுகுறித்து ஐஐடி கான்பூர் பேராசிரியர் அங்குஷ் ஷர்மா கூறுகையில், பொதுவாக குளிர் மற்றும் மழைகாலத்தில் காற்றில் அதிகப்படியான வைரஸ்கள் பரவுகின்றன. இந்த வைரஸ்கள் இந்த புதுமையான ஏர் ஃபில்டர் சிஸ்டம் பொருத்தப்பட்ட குளிர்சாதனப்பெட்டி மூலம் 99 சதவீத வடிகட்டப்படுகின்றன.