மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்தப் புதிய சர்பேஸ் ஹப் 2S டிஜிட்டல் வைட்போர்டு, சந்திப்பு தளம் மற்றும் இன்னும் பல சேவைகளுக்காக நிறுவனங்களில் இதைப் பயன்படுத்தலாம். மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த சாதனத்தை இந்தியச் சந்தையில் சர்பேஸ் ஹப் 2 கேமரா மற்றும் சர்பேஸ் ஹப் 2 பென்(Pen) ஆகிய கருவிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, நிறுவனம் ஹப் 2S சாதனத்திற்கான "ஸ்டீல்கேஸ் ரோம்" மொபைல் ஸ்டாண்டையும் அறிமுகம் செய்துள்ளது.
மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஹப் 2S மென்பொருள்
மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஹப் 2S அனைத்து மைக்ரோசாப்ட் சேவைகளின் அனைத்து விதமான மென்பொருள் மற்றும் மற்ற நிறுவனங்களின் மென்பொருளையும் கொண்டுள்ளது. விண்டோஸ் 10, டீம்ஸ், மைக்ரோசாப்ட் ஆபிஸ் 365, மைக்ரோசாப்ட் வைட்போர்டு மற்றும் பல சேவைகள் இதில் உள்ளன.
மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஹப் 2S சாதனம் 50 விழுக்காடிற்கும் அதிவேகமான கிராபிக்ஸ், 30 விழுக்காடு அதிகமான மேம்பட்ட அதீத செயல்திறனைக் கொண்டுள்ளது என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த புதிய பதிப்பு முந்தைய சர்பேஸ் ரகத்தை விட மெலிதானது. அசல் மேற்பரப்பு மையத்தை விட 40 விழுக்காடு இலகுவானது என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய துல்லிய நிற அமைப்பு தொழில்நுட்பங்களுடன் வெளிவருகிறது ஹானர் ஸ்மார்ட் டிவி!
திரையமைப்பு
இது 60 ஹெர்ட்ஸ் ஐபிஎஸ் பேனலுடன் 50 அங்குல பிக்சல்சென்ஸ் திரையுடன் கூடிய 3840 × 2560 பிக்சல்களைக் கொண்டது. அதேபோல், 10 பிட் வண்ணம், பாதுகாப்பிற்கான கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 10 பாயிண்ட் மல்டி-டச் ஆதரவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் விண்டோஸ் 10 இன் 8ஆவது ஜென் இன்டெல் கோர் i5 செயலி மற்றும் ஒருங்கிணைந்த இன்டெல் யுஎச்.டி கிராபிக்ஸ் 620 உடன் இயங்குகிறது.