இதுநாள்வரை, சைபர்பாதுகாப்புக்கு இந்தியா முக்கியத்துவம் அளித்ததே இல்லை. இந்தப் பிரச்னையை தீர்க்க கொள்கை, திறமை, வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதே தற்போதைய தேவை. இதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டின் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக சைபர் பாதுகாப்பு குழு தலைவர் ராஜீவ் கோபாலகிருஷ்ணா, இந்திய அறிவியல் கழகத்தின் கம்ப்யூட்டர் மற்றும் ஆட்டோமேசன் துறையின் துணை பேராசிரியர் வினோத் கணபதி, ஐஐடி கான்பூரில் கணினி பொறியியல் துறையின் பேராசிரியராக பணியாற்றிவரும் சந்தீப் சுக்லா, McAfee நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்பவியலாளர் தத்தத்ரேயா குல்கர்னி ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
சைபர் பாதுகாப்பின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக அதிக அளவு முதலீடு செய்யப்பட்டுவருகிறது. ஆனால், இதில் வெகுதொலைவு பயணிக்க வேண்டியுள்ளது.