தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

அடுத்த ஆண்டில் ஏவப்படும் சந்திராயன்-3?

2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் சந்திராயன்-3 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டில் ஏவப்படும் சந்திராயன்-3
அடுத்த ஆண்டில் ஏவப்படும் சந்திராயன்-3

By

Published : Jul 29, 2021, 12:59 PM IST

இதுகுறித்து மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணையமைச்சர் ஜித்தேந்திர சிங், சந்திராயன்-3 திட்டத்தை உண்மையாக கொண்டுவரும் பணி நடைபெற்றுவருவதாகத் தெரிவித்தார்.

இதனை செயல்முறைபடுத்த கட்டமைப்பை இறுதிபடுத்துதல், துணை அமைப்புகளை மெய்யாக்குதல், ஒருங்கிணைத்தல், விண்கல நிலை குறித்த விரிவான சோதனை, பூமியில் செயல்திறனை மதிப்பிடுவதற்கான சிறப்பு தேர்வுகள் போன்ற பணிகள் செய்யப்பட வேண்டும் என்றார்.

கரோனா தொற்று காரணமாக அனைத்து பணிகளும் முடக்கப்பட்ட நிலையில், ஊரடங்கு காலத்தில் அனைத்து பணிகளும் வீட்டிலிருந்தே மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டார். ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மற்ற வேலைகள் தொடர்ந்து நடத்தப்பட்டதாகவும். அனைத்து பணிகளும் நிறைவடையும் தருவாயில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க:'24 மணி நேரத்தில் ஒரு லட்சம் புக்கிங்' - ஓஹோ விற்பனையில் ஓலா!

ABOUT THE AUTHOR

...view details