தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

இந்திய சாலைகளை கவர வருகிறது கியாவின் புதிய கார்!

தென்கொரியாவில் நடந்து வரும் 2019 சியோல் ஆட்டோமொபைல் கண்காட்சியில், கியா எஸ்பி சிக்னேச்சர் என்ற பெயரிலான மாதிரி எஸ்யூவி ரகம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கால்பதிக்க இருக்கும் கியா மோட்டர்ஸின் புதிய வரவு குறித்த தகவல்களை அறிய வாகன விரும்பிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கியா எஸ்பி சிக்னேச்சர்

By

Published : Mar 29, 2019, 11:01 AM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

கடந்த ஆண்டு கிரேட்டர் நொய்டாவில் நடந்த சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில், கியா நிறுவனத்தின் எஸ்பி என்ற பெயரிலான எஸ்யூவி காரின் மாதிரி ரகம் முதல்முறையாக வெளியுலக பார்வைக்கு வந்தது. இந்த மாதிரி ரகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வரும் புதிய எஸ்யூவி ரகம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்த நிலையில், கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தாயகமான தென்கொரியாவில் நடந்து வரும் சியோல் ஆட்டோமொபைல் கண்காட்சியில், எஸ்பி சிக்னேச்சர் என்ற மாதிரி எஸ்யூவி பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. எனினும், டெல்லி ஆட்டோ கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்த எஸ்பி கான்செப்ட் ரகத்தைவிடப் பல விதத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

கியா எஸ்பி சிக்னேச்சர்

இந்தியாவின் வெற்றிகரமான எஸ்யூவி மாடலாக வலம் வரும் ஹூண்டாய் க்ரெட்டா பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய கியா எஸ்பி சிக்னேச்சர் எஸ்யூவியும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. டிசைனிலும், வசதிகளிலும் மட்டுமே கூடுதல், குறைவு இருக்கும்.

கிட்டத்தட்ட தயாரிப்புக்குக் கொண்டு செல்லும் அளவிற்கான மாற்றங்களை புதிய எஸ்பி எஸ்யூவியின் மாதிரி ரகத்தில் காண முடிகிறது. புதிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர், பம்பர், பகல் நேர விளக்குகள், செங்குத்தான எல்இடி பனி விளக்குகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

கியா எஸ்பி சிக்னேச்சர்

புதிய கியா எஸ்பி சிக்னேச்சர் கான்செப்ட் எஸ்யூவியில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜர், வைஃபை வசதி, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது.

இந்த எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. இரண்டுமே பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

கியா எஸ்பி சிக்னேச்சர்

இந்த ஆண்டு பிற்பாதியில் இந்த புதிய எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சத்திற்கு இடையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டா, ரெனோ கேப்ச்சர், நிஸான் கிக்ஸ் உள்ளிட்ட எஸ்யூவி ரகங்களுடன் போட்டி போடும்.

Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details