தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

Amazon layoff: 18,000 ஊழியர்களை அதிரடியாக நீக்கிய அமேசான்!

கடினமான பொருளாதார சூழ்நிலை காரணமாக 18,000 ஊழியர்களை அமேசான் நிறுவனம் நீக்குவதாக அறிவித்துள்ளது.

18,000 ஊழியர்களை அதிரடியாக நீக்கிய அமேசான்!
18,000 ஊழியர்களை அதிரடியாக நீக்கிய அமேசான்!

By

Published : Jan 5, 2023, 9:40 AM IST

சான் பிரான்சிஸ்கோ: பிரபல ஆன்லைன் வர்த்தக தளமான அமேசான் நிறுவனத்தில், நேரடியாகவும் ரிமோட் மூலமும் சுமார் 1.5 மில்லியன் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடியை சந்திப்பதாக அமேசான் தெரிவித்து வந்தது.

இதனிடையே கடந்த 2022, நவம்பரில் 8,000 ஊழியர்களை அதாவது 10 சதவீதம் ஊழியர்களை முதலில் நீக்கம் செய்து அறிவித்தது. இதனையடுத்து வந்த விழாக்கால விற்பனையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த அமேசானுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

ஏனென்றால், விலைவாசி உயர்வு, நுகர்வோர்கள் மற்றும் டீலர்கள் மத்தியில் அதிக பணப்புழக்கம் இல்லாமை ஆகிய காரணங்களால் அவர்களது இலக்கை அடைய முடியவில்லை. மேலும் மீண்டும் கரோனா கட்டுப்பாடுகள் பரவலான நாடுகளில் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அமேசான் பங்கின் மதிப்பு 50 சதவீதம் வரை சரிந்தது. இந்த நிலையில் அமேசான் தலைமை நிர்வாக அலுவலர், ஆண்டி ஜஸ்ஸி அமேசான் நிறுவனத்தில் இருந்து 18,000 ஊழியர்களை நீக்குவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆண்டி ஜஸ்ஸி எழுதிய கடிதத்தில், “தற்போது கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பொருளாதாரச் சூழல் கடினமாக உள்ளது.

எதிர்பார்த்த இலக்கை எவ்வளவு முயற்சி செய்தும், நுகர்வோர்களின் விருப்பமின்மையால் அடைய முடியவில்லை. இதனால் அமேசான் நிறுவனத்தில் இருந்து 18,000 ஊழியர்கள் நீக்கப்படுகின்றனர். இந்த வேலைநீக்கத்தில் Amazon Go, Amazon Fresh, PXT மற்றும் HR குழுவில் உள்ளவர்களும் அடங்குவர்” என தெரிவித்துள்ளார்.

அமேசான் வரலாற்றிலேயே 18,000 ஊழியர்களை நீக்குவது இதுவே முதல்முறை. அதேநேரம் அமேசானின் இந்த வேலைநீக்கம் என்பது, அவற்றின் ஊழியர்களில் ஒரு பகுதி மட்டுமே. முன்னதாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் ஆகிய சமூக ஊடகங்களில் இருந்தும் குறிப்பிட்ட சதவீத ஊழியர்கள் நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ட்விட்டரில் விரைவில் அரசியல் விளம்பரங்கள்

ABOUT THE AUTHOR

...view details