கலிஃபோர்னியாவில் 'ஜோமா டெக்' என்ற பெயரில் சேனல் நடத்திவரும் பொறியாளரான இளம் யூ-ட்யூபர் ஜோனத்தன் மா, கணினி நிரல் (computer programming), கிரிப்டோ, தொழில்நுட்பம் ஆகியவற்றின் காணொலிகளைப் பகிர்ந்துவருகிறார்.
இந்த மாதத் தொடக்கத்தில், அவர் தனது என்.எஃப்.டி. (NFT) வருவாயான 'Vaxxed Doggos'-ஐ வெளியிட்டார், என்.எஃப்.டி., டிஜிட்டல் பணத்திற்காக அவர் 42 விநாடிகளில் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சம்பாதித்தார். இதில் செலவையெல்லாம் கழித்தாலும் அவருக்கு ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் மிஞ்சுகிறது.
அமெரிக்கரான இவரின் கனவு என்பது திரைப்படத் தயாரிப்பாளர் ஆவதே, இதற்கு சிறிது காலம் ஆகலாம். இருப்பினும் ஓவர் நைட்டில் கோடிக்கணக்கில் சம்பாதித்து அனைவரையும் வாயைப் பிளக்க வைத்துள்ளார் மா. இவர் முன்னாள் ஃபேஸ்புக், கூகுள் மென்பொருள் பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.