மேலை நாடுகளைப் போலவே நம் நாட்டிலும் பெரிய வணிக வளாகங்களில் நிறுத்துவதற்கென்று பிரத்யேகமான இடங்கள் வந்துவிட்டன. வண்டியை நிறுத்தி விட்டுத் தேடுவது சில நேரங்களில் கஷ்டமாக இருக்கும். இந்த பிரச்னையை தீர்க்கவே அவெர் கார் எனும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை நம் வாகனத்தினுள் வைத்து விட்டால் போதும், ஒரு சிறிய பாட்டிலின் மூடியைப் போன்று இருக்கும் இந்த கருவி, நமது வாகனச் சாவியையோ, காரையோ கண்டுபிடிக்கச் செயலி மூலம் உதவுகிறது.
ETV Bharat / science-and-technology
காரை கண்டுபிடிக்க ’அவேர் கார்’ எனும் புதிய கருவி அறிமுகம்! - காரை பாதுகாக்க
பெரிய கூட்டத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு இனி தேடுவதை விட்டுவிடுங்கள். உங்களுக்கு உதவ ’அவேர் கார்’ எனும் கருவி புதிதாக சந்தைக்கு வந்துள்ளது. இதை கொண்டு காரை தேடவோ, திருடு போகாமல் தடுக்கவோ முடியும்.
அவேர் கார்
இதை ஒவ்வொரு முறையும் மின்னூட்டவோ, அவ்வப்போது மின்கலனை மாற்றவோ தேவையில்லை. வருடத்திற்கு ஒரு முறை மின்கலனை மாற்றினால் போதுமானது. மிக எளிதாக உபயோகிக்கக் கூடிய இதன் செயலி வாகனத்தின் அருகில் வந்தவுடன் தானாகவே இயங்கத் தொடங்கிவிடும். குழப்பிக் கொள்ளும் வகையில் பலவித பொத்தான்கள் ஏதுவன்றி அனைத்தும் ஒரு சேர்ந்து ஒரே பொத்தானாக செயல்படுகிறது இந்த அவேர் கார் கருவி.
Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST