காசியாபாத்: உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தின் அண்டை மாவட்டமான கிழக்கு டெல்லியில் உள்ளது தஸ்னா சிறை. இந்த சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என சுமார் 5500 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
மாநில காவல் மற்றும் சிறைத்துறை சார்பில் கைதிகள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. காய்ச்சல், காசநோய், எச்ஐவி, சர்க்கரை உள்ளிட்ட நோய்கள் குறித்து பரிசோதனை செய்யப்பட்டதில், 140 கைதிகளுக்கு எய்ட்ஸ் பாதிப்பும், 35 கைதிகளுக்கு காசநோய் பாதிப்பும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.