தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

நீர் மேலாண்மை இன்றி அமையாது உலகு! - நீர் பற்றாக்குறை

காலநிலை மாற்றங்கள் காரணமாக நீரின் வெப்பநிலை உயர்கிறது. அதன் விளைவாக ஆக்ஸிஜன் அளவு குறைந்து, நீரின் தரமும் குறைகிறது. இயற்கை நீர்நிலைகள், ஏரிகள் தம்மை தாமே சுத்தம் செய்யும் திறனை இழக்கும். வறட்சி மற்றும் பஞ்சத்தின் போது, ​​மாசுபாடு அதிகரித்து நீர் மாசுபடும். இந்த அனைத்து மோசமான விளைவுகளும் இறுதியில் உணவு உற்பத்தியை பாதிக்கும்.

நீர்
நீர்

By

Published : Aug 12, 2020, 8:40 PM IST

சமீப காலமாக இயற்கை வளங்கள் சார்ந்த சுற்றுச்சூழல் மாற்றங்கள் அதிகம் நடைபெறுவதால், உலகம் முழுவதிலும் இருக்கும் பலதரப்பட்ட மக்களும் அச்சத்தில் உள்ளனர். மொத்த உலக மக்கள் தொகை தற்போது சுமார் 780 கோடி. இதில், 220 கோடி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் இல்லை. 420 கோடி மக்களுக்கு முறையான துப்புரவு வசதிகள் இல்லை. ஐக்கிய நாடுகளின் உலக நீர் மேம்பாட்டு கவுன்சிலின் அறிக்கையின்படி (2020), சுற்றுச்சூழல் சார்ந்து நடைபெற்று வரும் மாற்றங்கள், தரமான நீர் கிடைப்பதில் கடும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. ஒருங்கிணைந்த வளர்ச்சியின் நோக்கங்களுக்காக UNO வழங்கிய வழிகாட்டுதலின்படி உலக நாடுகள் செயல்படாவிட்டால், 2030க்குள் அனைவருக்கும் பாதுகாப்பான நீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதற்கான லட்சியம் நிறைவேறாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த நூறு ஆண்டுகளில் நீரின் நுகர்வு ஆறு மடங்கு வரை அதிகரித்துள்ளது. ஒருபுறம் அதிகமான அளவில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. மறுபுறம், காலநிலை மாற்றங்கள், அபாயகரமான சூறாவளிகள், வெள்ளம், வறட்சி ஆகியவை ஒரு சாபமாக மாறி வருவதால் உலக நாடுகள் சிக்கல்களுக்கு ஆளாகி விட்டன. இதன் விளைவாக, தண்ணீருக்கான தேவை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. உண்மையில், பல நாடுகள் நீர் நெருக்கடியின் சிக்கல்களை எதிர்கொள்ளும் நேரம் இது. உலக வள கவுன்சிலின் 2019ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, நீர் நெருக்கடியை எதிர்கொள்ளும் நாடுகளில் கத்தார் முதலிடத்திலும், இந்தியா 13ஆவது இடத்திலும் உள்ளது.

நீர் பற்றாக்குறையின் அளவுகளில் வேறுபாடு இருக்கலாம், ஆனால் எதிர்காலத்தில், உலகின் அனைத்து நாடுகளும் நீர் பற்றாக்குறையை எதிர்கொள்வது உறுதி என்று நிபுணர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். மொத்த நீர்த் தேவைகளில் 69 சதவிகிதம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. எண்ணெய்ப் பொருட்கள், மீன்வளம் ஆகியவை சார்ந்த தொழில்கள் நீர்ப் பற்றாக்குறையின் மோசமான தாக்கத்தை எதிர்கொள்கின்றன. UNOவின் வேளாண் மேம்பாடு, பன்னாட்டு நிதியம் ஆகியவை, இது தாமதமான மெய்யுணர்வு என்றும், உலகில் உள்ள அனைவரும் நீர் மேலாண்மைக்கு உறுதியுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஒரு அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காலநிலை மாற்றங்கள் காரணமாக நீரின் வெப்பநிலை உயர்கிறது. இதன் விளைவாக ஆக்ஸிஜன் அளவு குறைந்து, நீரின் தரம் குறைகிறது. இயற்கை நீர்நிலைகள், ஏரிகள் தம்மை தாமே சுத்தம் செய்யும் திறனை இழக்கும். வறட்சி மற்றும் பஞ்சத்தின் போது, ​​மாசுபாடு அதிகரித்து நீர் மாசுபடும். இந்த அனைத்து மோசமான விளைவுகளும் இறுதியில் உணவு உற்பத்தியை பாதிக்கும். காலநிலை, உடல் சார்ந்த மற்றும் உளவியல் மாற்றங்கள், நோய்கள் மற்றும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக மக்கள் பிற இடங்களுக்கு குடிபெயர்கின்றனர். மக்கள் சிரமங்களிலிருந்து வெளியேற முடியாத அளவுக்கு சூழ்நிலை மிகவும் மோசமாகும். அது மட்டுமல்லாமல், காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களின் அழிவு காரணமாக, பல்லுயிர்ப் பெருக்கம் பெரிதும் பாதிக்கப்படும்.

காலநிலை மாற்றங்கள் காரணமாக மழைப்பொழிவில் கடுமையான மாறுபாடுகள் ஏற்படுவதால் பல வகையான நிச்சயமற்ற தன்மைக்கு இது வழிவகுக்கிறது. வெப்ப மண்டலப் பகுதிகளில் நீர்வளம் குறைவதைக் காணலாம். அவற்றில் இந்தியாவும் ஒன்று. உலக வரைபடத்திலிருந்து சில பகுதிகள் காணாமல் போவதற்கான அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிகிறது. காலநிலை மாற்றங்களின் விளைவு பெரும்பாலும் பனிசார்ந்த நதிகளில் காணப்படும்.

தீர்வுக்கான மாற்றங்களை நோக்கி உலக நாடுகள் இரட்டை திட்டமிடலுடன் முன்னேற வேண்டும். இதன் ஒரு பகுதியாக, சாத்தியமான காலநிலைகளை அவர்கள் அறிவியல் பூர்வமாக கணிக்க முடியும். இதன் மூலம், தொழில்நுட்ப ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் காலநிலை மாற்றங்களை மதிப்பிட முடியும். அவற்றுடன், மாற்றங்களின் தீவிரத்தை நாம் மதிப்பிட்டு அதற்கான சரியான நடவடிக்கைகள் எடுக்க முடியும். கார்பன் டை ஆக்சைடு, கிரீன்ஹவுஸ் வாயுக்களைக் குறைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மட்டுமே அதற்கான தீர்வாக இருக்க முடியும். இது அதிக அளவு புவியியல் பகுதிகளுடன் தொடர்புடையது. நீர்வளங்களின் பயன்பாடு, அவற்றின் மறுசுழற்சி, கழிவுநீர் மேலாண்மை போன்றவை இதில் அடங்கும். இதற்குக் காரணம், கிரீன்ஹவுஸ் வாயு உற்பத்தியில் மூன்று முதல் ஏழு விழுக்காடு வரை கழிவுநீரில் இருந்து உருவாகிறது.

கழிவு நீரிலிருந்து வெளியேறும் மீத்தேன் வாயு ஒரு சக்திவாய்ந்த கிரீன்ஹவுஸ் வாயு ஆகும். உலகளவில், 80 முதல் 90 விழுக்காடு கழிவு நீர் எந்தவொரு சுத்திகரிப்பும் இல்லாமல் சற்றுப்புறத்தில் வெளியேற்றப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஜோர்டான், மெக்ஸிகோ, பெரு, தாய்லாந்து போன்ற நாடுகளில், நவீன சுழற்சி முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மீத்தேன் கரிமப் பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு தேவையான ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் கரியமில வாயு மற்றும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் ஆயிரக்கணக்கான டன்கள் வரை குறைக்கப்படும்.

இதேபோல், பழங்கால விவசாய நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஈரப்பதத்தைப் பாதுகாக்க முடியும். கழிவு நீரை ஓரளவு மறுசுழற்சி செய்து சுத்திகரிப்பதன் மூலம் நீர்க்கழிவுகள் வெகுவாகக் குறைக்கப்படும். நீர் வளங்களைப் பராமரிப்பதற்கும் சிறந்த சுகாதார சேவைகளுக்கும் தன்னார்வ அமைப்புகளுக்கு அரசாங்கம் நிதி உதவி வழங்க வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details