பாட்னா:பிகாரில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பின்மை, பெண்கள் பாதுகாப்பு என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலின்போது பெண்கள் திரண்டு வந்து வாக்களித்துள்ளனர். இது தங்களுக்கு சாதகமான சமிக்ஞை என்று எதிர்க்கட்சிகள் கூறும்நிலையில், பெண்களின் ஆதரவு ஆளுங்கட்சியான நிதிஷ் குமாருக்கு கிடைத்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இதெல்லாம் ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலை, இந்த வாக்குகள் தேஜஸ்வி யாதவ்வுக்கு சென்றிருக்க வாய்ப்புள்ளன என்ற கருத்து வலுப்பெறுவதையும் மறுப்பதற்கில்லை.
இது குறித்து அரசியல் கட்சி பிரமுகர்களின் பேட்டி மற்றும் அரசியல் நிபுணரின் கருத்தை பார்க்கலாம்.
பெண் வாக்காளர்கள் அதிகரிப்பு
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தலில் 55.7 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஆண்களின் பங்கு 53 விழுக்காடு ஆகவும், பெண்கள் 58.8 விழுக்காடு ஆகவும் உள்ளனர். இது ஆளுங்கட்சிக்கு ஆதரவான சமிக்ஞையான நிதிஷ் குமார் கட்சியினர் காண்கின்றனர்.
ஏனெனில் நிதிஷ் குமார் தனது கட்சியின் ஒவ்வொரு பேரணியின்போது பெண் வாக்காளர்களை மையப்படுத்தியே பேசிவந்தார். மேலும், தனது அரசு முன்னெடுத்துள்ள பெண்கள் நலத் திட்டங்களையும் அவர் அடிக்கோடிட்டு காட்டினார். குறிப்பாக மது விலக்கு, பெண் குழந்தை கல்வி மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார். அதேபோல் ஐக்கிய ஜனதா தளத்தின் இதர தலைவர்களும், “இருளில் இருந்து பெண்கள், குழந்தைகளை மீட்க நிதிஷ் குமார் முன்னெடுத்த திட்டங்கள்” குறித்து பேசினார்கள்.
இதெல்லாம் பெண்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிக்க காரணமாக அமைந்திருக்கலாம். இது குறித்து ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தித் தொடர்பாளர் ராஜிவ் ரஞ்சன் கூறுகையில், தற்போது போட்டி, “நல்லாட்சியா, காட்டாட்சியா?, வளர்ச்சி அரசா, சோம்பேறி அரசா? என்பதற்கு இடையே நடக்கிறது. ஐக்கிய ஜனதா தளத்தின் ஆட்சியில் மக்கள் இருளிலிருந்து வெளிச்சத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் மீண்டும் இருளை நோக்கி பின்நோக்கி செல்ல விரும்ப மாட்டார்கள். அவர்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள், அதே மனதுடன் வாக்களிக்க செல்வார்கள்” என்றார்.
மேலும், “தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் துணையுடன் நிதிஷ் குமார் மீண்டும் ஆட்சிக்கு வருவார்” என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
பிகார் சட்டப்பேரவை தேர்தல்; 8 அமைச்சர்களின் தலைவிதியை நிர்ணயிக்க போகும் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு!