தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

புயல்களின் போது இழப்புகளைத் தவிர்க்க அதிக கவனம் செலுத்த வேண்டும் - அதிக கவனம் செலுத்த வேண்டும்

இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக உள்கட்டமைப்பை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்த ஆண்டின் முதல் புயல் வீசியுள்ளது. நாட்டின் மேற்கு கடற்கரையைத் தாக்கிய புயல் அதிகமான அழிவை ஏற்படுத்தி சென்றுள்ளது.

புயல்களின் போது இழப்புகளைத் தவிர்க்க அதிக கவனம் செலுத்த வேண்டும்
புயல்களின் போது இழப்புகளைத் தவிர்க்க அதிக கவனம் செலுத்த வேண்டும்

By

Published : May 22, 2021, 9:23 AM IST

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிர் இழப்பு பெருமளவு தவிர்க்கப்பட்டிருந்தாலும், மொத்த சொத்துகளின் இழப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை .

அளவிற்கதிகமான கார்பன் உமிழ்வுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் காரணமாக அரேபிக்கடல் வெப்பமடைந்து வருகிறது. சுற்றுச்சூழல் மாற்றங்களின் விளைவாக ஏற்படும் புயல்கள் தற்போது இந்தியாவின் மேற்கு பகுதியிலும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. வரும் காலங்களில் மேற்கு கடற்கரையும் அடிக்கடி புயல்களால் பாதிக்கப்பட போவதால், கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட பேரழிவு போன்றே ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

புயல்களின் போது இழப்பு

வெப்பமண்டல புயல்களில், வங்காள விரிகுடாவில் நான்கு விழுக்காடு மட்டுமே உருவாகின்றன. அவை உலகம் முழுவதும் ஏற்படும் புயல்களால் ஏற்படும் மொத்த சொத்துகள் இழப்பில் 80 விழுக்காட்டை ஏற்படுத்துகின்றன. அரேபிய கடலில் உருவாகும் புயல்களும் அதே அளவிற்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். இந்தியப் பெருங்கடலில் தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். முன்கூட்டிய எச்சரிக்கைகள் மூலம் புயல்களால் ஏற்படும் உயிர் இழப்பை தடுத்திருந்தாலும், மக்களின் சமூக-பொருளாதார நிலைமையை பாதிக்கும் சொத்து இழப்பைக் குறைப்பதே இப்போது எங்கள் நோக்கம் என்று வானிலை ஆய்வு இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஃபானி புயல் மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷில் ரூ.59,000 கோடி அளவிற்கு சொத்துகள் இழப்பை ஏற்படுத்தியது. மேற்குவங்கத்தில் கடந்த ஆண்டு ஆம்பன் புயலால் அதை விட இரண்டு மடங்கு இழப்புகள் ஏற்பட்டன. இந்தியாவில் 7000 கிலோ மீட்டர் நீளத்திற்கு கடற்கரை உள்ளது. இதில் 5000 கிலோமீட்டர் தூரம் உள்ள கடற்கரை பெரும் பேரழிவுகளுக்கு ஆளாகிறது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தேசிய புயல் அபாயத்தைக் குறைக்கும் திட்டத்தின் (NCRMP) கீழ் சொத்து இழப்பைக் குறைக்க நடவடிக்கை எடுக்க அப்போதைய மத்திய அரசு முடிவு செய்திருந்தது.

புயல்

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, ரூ.2361 கோடி செலவில் NCRMP திட்டத்தை குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் மேற்கு வங்காளத்தில் செயல்படுத்த மோடி அரசு அனுமதி அளித்தது. இந்த திட்டத்தின் கீழ் பணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவை இன்னும் நத்தை வேகத்தில் நகர்கின்றன. திட்டத்தை செயல்படுத்துவதில் இதுபோன்ற அலட்சிய போக்கின் காரணமாக நாட்டு மக்கள் அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது.

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வீசிய சூப்பர் புயல் காரணமாக ஏற்பட்ட பேரழிவிலிருந்து படிப்பினைகளைப் பெற்ற ஒடிசா அரசு, இதேபோன்ற பேரழிவுகளைத் தாங்கும் வகையில் அதன் உள்கட்டமைப்பை வலுப்படுத்தியது. தங்குமிடங்கள், கிராம அளவிலான தன்னார்வலர்கள் மற்றும் உணவுப்பொருள் விநியோகம் போன்றவற்றின் வலுவான கட்டமைப்பை நிறுவுவதன் மூலம் ஆபத்துக்களை எளிதில் தடுக்க முடியும். உலகில், புயலால் பாதிப்புக்குள்ளாகும் 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில் அமைந்துள்ளன. அவற்றில் மும்பை மற்றும் சென்னை ஆகியவையும் அடங்கும்.

இழப்பு

இந்த நகரங்களின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால் சரியான திட்டமிடுதல் என்பது தவிர்க்க இயலாதது. புயலால் ஏற்படும் அழிவில் இருந்து பாதுகாக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெற வேண்டுமெனில், அது கடலோர மாநிலங்களில் பேரழிவு பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்த வேண்டும். மேலும், கொடிய புயல்களை உருவாக்கும் காலநிலை மாற்றங்களிலிருந்து தேசத்தை பாதுகாக்க, மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்கள் பொறுப்புகளை மிகவும் அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details