தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

குறைந்த கால அவகாசத்தில் அதிகபட்ச தடுப்பூசி - தடுப்பூசி விநியோகம்

நாடு முழுவதும் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. பிரதமர் மோடியின் வார்த்தைகளில் கூற வேண்டுமானால், மிகப் பெரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளோம்.

தடுப்பூசி
தடுப்பூசி

By

Published : Mar 20, 2021, 6:19 AM IST

கோவிட் தொற்று மீண்டும் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது. நாக்பூரில் ஊரடங்கு விதிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்தூர், போபால், சூரத், ராஜ்கோட், அகமதாபாத், வதோதரா ஆகிய இடங்களிலும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. இது இரண்டாம் கட்ட நோய் பரவலின் தீவிரத்தை நமக்கு உணர்த்துகிறது.

நேற்று மட்டும் நாடு முழுவதும் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. பிரதமர் மோடியின் வார்த்தைகளில் கூற வேண்டுமானால், மிகப் பெரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளோம். மத்திய சுகாதார அமைச்சகம் 24 மணி நேரத்திற்குள் 30 லட்சம் டோஸ் கோவிட் தடுப்பூசி அளித்து சாதனை படைத்ததாக அறிவித்தது. அதே நாளில் ஒரு நாடாளுமன்ற நிலைக்குழுவின் விவரங்களும் வெளிவந்தன.

நாட்டில்தடுப்பூசி செயல்முறை தொடங்கி இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. இன்று வரை சுமார் மூன்றரை கோடி மக்களுக்கு தடுப்பூசிப் போடப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் 50 கோடி பேருக்கு தடுப்பூசி போடுவதை இலக்காக கொண்டு, அந்த இலக்கில் 7 விழுக்காடு மட்டுமே தற்போது வரை போடப்பட்டுள்ளது.

தற்போதைய வேகத்தின்படி, ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி போட ஏழு ஆண்டுகள் ஆகும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது. தடுப்பூசி போடுவது தாமதமானால், அது வைரஸின் புதிய பிறழ்வு தோன்றுவதற்கு வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். ஏற்கனவே மகாராஷ்டிரா, தமிழ்நாடு, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், டெல்லி, குஜராத், கர்நாடகா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் தினமும் புதிய தொற்றுகள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்திவருகிறது.

பல்வேறு மாநிலங்களில் பல மாவட்டங்களில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மறுபுறம், கால அவகாசம் காரணமாக தடுப்பூசிகள் வெவ்வேறு இடங்களில் வீணடிக்கப்படுவதாக தகவல்கள் உள்ளன. மேலும் சோதனை, தடுப்பூசி மையங்களை அமைப்பதற்கான வழிமுறைகளை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.

அந்த வழிமுறைகளின்படி, தடுப்பூசி செயல்முறையை முடிக்க அனைத்து மாநிலங்களும் வேகம் செல்ல வேண்டும். முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதைத் தொடங்குவதற்கும் பின்னர் வெவ்வேறு வயதினருக்கு தடுப்பூசி போடுவதற்கும் மேற்கொள்ளப்பட்ட அரசாங்கத்தின் திட்டம் மிகவும் மெதுவாக உள்ளது.

இந்த செயல்முறையை விரைவுபடுத்துவதற்கான அரசாங்க செயல் திட்டத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. மருத்துவ நிலைமைகளுடன் ஒரு குறிப்பிட்ட வயதினருக்கு தடுப்பூசி வழங்குவதற்கான தற்போதைய கட்டுப்பாடுகளுக்கு பதிலாக, தேவைக்கேற்ப தடுப்பூசி கொடுக்க விதிகளை தளர்த்த வேண்டும்.

விதிகள் அதற்கேற்ப மாற்றப்பட வேண்டும். டெல்லி, புனே போன்ற நகரங்களில் நடத்தப்பட்ட நோயெதிர்ப்பு குறித்த செரோலாஜிக்கல் கணக்கெடுப்புகளில் 50 விழுக்காடு மக்கள் இந்த நோய்க்கான நோயெதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இத்தகைய இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கு கடைசி கட்டத்தில் தடுப்பூசி போடலாம்.

இருப்பினும், மற்ற அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும். கோவிட் என்பது மூக்கு வழியாக பரவும் ஒரு தொற்றுநோய். எனவே, மூக்கு வழியாக தடுப்பூசி வழங்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஒற்றை டோஸ் தடுப்பூசியை மூக்கு வழியாக வழங்குவது குழந்தைகள், வயதானவர்களுக்கு ஒரே மாதிரியாக இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த வகையான தடுப்பூசியின் முதல் கட்ட மருத்துவ பரிசோதனைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. அரசாங்கத்தின் தரப்பில் எடுக்கப்படும் முயற்சிகள் சோதனைகளை விரைவுபடுத்தவும், தடுப்பூசி செயல்முறையை ஊக்குவிக்கவும் உதவும். இது சிவில் சமூகத்திற்கு ஒரு வலுவான பாதுகாப்பினை வழங்கும்.

முகக்கவசங்களை அணிந்து சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்த பொது விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். குறைவான காலத்தில் அதிகபட்ச தடுப்பூசிக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ​​அதே நேரத்தில் ஆராய்ச்சி பணிகளைத் தொடர்ந்தால் மட்டுமே இந்த பெரும் நெருக்கடியிலிருந்து தேசத்தை காப்பாற்ற முடியும்.

ABOUT THE AUTHOR

...view details