உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய நாட்டு அதிபர் புதின் இன்று (பிப்.24) உத்தரவிட்டார். இதன்படி ரஷ்யா, உக்ரைன் மீது இன்று காலை 5 மணியளவில் தாக்குதலைத் தொடங்கியது. இதையடுத்து வான்வழி, தரை வழித் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இருநாட்டு ராணுவமும் மாறி,மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன.
தாக்குதல் குறித்து அமெரிக்கா முன்கூட்டியே யுகித்து உறுதியாக இருந்தபோதிலும், மேற்கத்திய நாடுகள், ரஷ்யா வெறும் பிடிவாதக் கொள்கையைக் காட்டிக்கொண்டும், பின்பற்றிக்கொண்டும் இருப்பதாகவும் கருதினர்.
மேலும் உக்ரேனின் மூன்று பகுதிகளிலும் கிழக்கு, வடக்கு, தெற்கு பகுதிகளில் ராணுவத்தை நிலை நிறுத்தி வைத்திருந்தன. இதனால் ரஷ்யப்போர் தொடங்காது என நம்பினர்.
இந்த சந்தேகத்திற்குப்பதிலளிக்கும் விதமாக ரஷ்யா இன்று குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் இந்தப் போர் தந்திரம் கடந்த காலங்களிலிருந்து 'காப்பி' செய்யப்பட்டது தான் எனக் கூறுகின்றனர். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக கொரியப்போர் மற்றும் பெர்லின் நெருக்கடியைக் கூறலாம்.
பெர்லின் நெருக்கடி
1948-49 பெர்லின் நெருக்கடியின்போது, சோவியத் பிரதமர் ஜோசப் ஸ்டாலின், இரண்டாம் உலகப்போரில் வெற்றி பெற்ற பிறகு, பெர்லின் மீதான சோவியத் நிலைப்பாடு என்ன என்பதை மேற்கத்திய நாடுகளை யூகிக்க வைத்தார். பெர்லின் ஒருங்கிணைந்த ஜெர்மன் தலைநகராக வேண்டுமா அல்லது பிரிக்கப்பட வேண்டுமா என சிந்திக்க வைத்தார்.