"நாய்கள் வாழும் உலகத்தில் மனிதன் வாழத் தகுதியற்றவன்" - இந்தக் கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் தினமும் ஒரு செய்தி வெளியாகிவருகிறது. நாய்களை மனிதர்கள் பல்வேறு முறைகளில் துன்புறுத்தினாலும் தன்னை வளர்த்தவர்களுக்கு ஒரு சிக்கல் என்றால் அனைவருக்கும் முன்னால் காப்பாற்ற வருவது நாய்கள்தான்.
எல்லையில் இருக்கும் ராணுவம் மட்டுமல்ல; வீட்டிலிருக்கும் ராஜபாளையங்களும்தான்! நம்மை காக்க படாதபாடுபடுகின்றன. அதிலும் குழந்தைகளை பாதுகாப்பது என்று வந்துவிட்டால் தமிழ் பட நாயகர்கள் போல தங்கள் உயிர்களை தியாகம் செய்ய துளியும் தயங்குவதில்லை.